299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - ஒரே நாளில் 75 பாடசாலைகள் வெளியேற்றம்!!

20 ஐப்பசி 2023 வெள்ளி 07:50 | பார்வைகள் : 10234
இந்த புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நிலவிய பதட்டமான சூழ்நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 19) மட்டும் 75 பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் இதுவரை பலரை கைது செய்துள்ளோம். அவர்களில் பலர் 11, 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள்!” என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு 3 வருட சிறையும், 50,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025