இஸ்ரேலிய வீரர்களுக்கு திறந்தவெளி சமையலறை....
20 ஐப்பசி 2023 வெள்ளி 07:45 | பார்வைகள் : 9776
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதலானது 14வது நாளாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் காசாவின் பொதுமக்களை வடக்கு பகுதியில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்தனர்.
அத்துடன் காசாவின் ராஃபா, கான், யூனிஸ், மத்திய காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை நடந்த போர் தாக்குதலில் 2278 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 9,700 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் காசா எல்லையில் திறந்தவெளி சமையலறை திறக்கப்பட்டுள்ளது.
இங்கு இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவது, முடி திருத்துவது, மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
போர் மேலும் தீவிரவடையும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan