ஜப்பானில் கோர விபத்து - விபத்தில் சிக்கிய 30 மாணவர்கள்
20 ஐப்பசி 2023 வெள்ளி 07:33 | பார்வைகள் : 8268
ஜப்பானில் பாடசாலை பேருந்து மீது லொறி மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
18 மாணவர்கள் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஜப்பானில் மேற்கு நகரான நராவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக் கொண்டு சென்ற பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
கசிகரா நகரின் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து சென்று கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லொறி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி குழந்தைகள் 18 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan