Paristamil Navigation Paristamil advert login

யாழில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் - இளைஞன் கைது

யாழில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் - இளைஞன் கைது

20 ஐப்பசி 2023 வெள்ளி 06:04 | பார்வைகள் : 8307


யாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரால் இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தெல்லிப்பளை பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த உறவினரான சிறுவன் , உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதனை அவதானித்த சிறுவனின் பெற்றோர் , தமது பிள்ளையை இளைஞனிடம் இருந்து பாதுகாத்து , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பலாலி பொலிஸாருக்கும் அறிவித்தனர். முறைப்பாட்னை தொடர்ந்து பலாலி பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடாத்திய இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்