Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு பயணிக்கும் ஜனாதிபதி மக்ரோன்!

இஸ்ரேலுக்கு பயணிக்கும் ஜனாதிபதி மக்ரோன்!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 21:49 | பார்வைகள் : 16414


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலுக்கு பயணமாக உள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கிடையே மோதல் ஆரம்பித்து இரு வாரங்களின் பின்னர் அவர் அங்கு பயணிக்க உள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை பரிசில் இருந்து புறப்பட்டு இஸ்ரேலின் Tel Aviv நகருக்கு சென்றடைய உள்ளார். அங்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நத்தான்யாஹுவினை சந்திக்க உள்ளார். இத்தகவலை சற்று முன்னர் பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை (எலிசே) அறிவித்துள்ளது.  

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இதுவரை 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை. 

காணாமல் போனவர்களை ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்