வெர்சாய் மாளிகை எட்டு நாட்களில் ஏழு தடவைகள் வெளியேற்றம்!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 10186
பரிசில் உள்ள château de Versailles இன்று ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக வெளியேற்றம் செய்யப்பட்டிருந்தது. கடந்த எட்டு நாட்களில் இடம்பெறும் ஏழாவது வெளியேற்றம் இதுவாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி அளவில்ன் குறித்த château de Versailles கட்டிடத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறையினர் தேடுதல் பணியை மேற்கொண்டனர். மீண்டும் திறக்கப்படும் நேரம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியில் இருந்து இன்று வரையான எட்டு நாட்களில் இதுவரை ஏழு தடவைகள் குறித்த கட்டிடம் வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், வெளியேற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.