மட்டக்களப்பில் சிக்கிய 3000 கிலோ எடை இராட்சத திமிங்கிலம்

22 ஐப்பசி 2023 ஞாயிறு 10:29 | பார்வைகள் : 6406
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வலையில் சனிக்கிழமை(21)திகதி திமிங்கலச்சுறா (Whale Shark) மீன் பிடிபட்டுள்ளது .
குறித்த மீன் சுமார் 3000 கிலோ எடை கொண்டதாக இருக்குமென மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த இராட்சத மீன் அருகிவரும் உயிரினம் என்பதால் மீனவர்களால் வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மட்டக்களப்பு கடலில் பிடிபட்ட இராட்சத தமிங்கிலச்சுறா அரிதான உயிரினம்,எது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் என்பதால் திருப்பி அனுப்ப பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.