மீண்டும் இணையுமா விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணி?
22 ஐப்பசி 2023 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 10779
தமிழ் சினிமா உலகில் இன்று வசூல் நாயகனாக முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அவரும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இருவரும் இணைந்த படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்பது முக்கியமானது.
முதன் முதலில் அக்கூட்டணி இணைந்த 'துப்பாக்கி' படம் விஜய்க்கு முதல் 100 கோடி வசூலை பெற்றுத் தந்தது. அதன்பின் 2014ல் வெளிவந்த 'கத்தி', 2018ல் வெளிவந்த 'சர்க்கார்' ஆகிய படங்களும் 100 கோடி வசூலைக் கடந்த படங்கள். அதன் பிறகு இருவரும் இணைய வேண்டிய 'விஜய் 65' படம் சில பல பிரச்சனைகளால் நடக்காமலே போனது.
விஜய், ஏஆர் முருகதாஸ் இணைந்த இரண்டாவது படமான 'கத்தி' படம் வெளிவந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. படம் வெளிவருவதற்கு முன்பு சில பல சர்ச்சைகளை சந்தித்தது. இருப்பினும் அவையெல்லாம் பேசித் தீர்க்கப்பட்டு படம் சுமூகமாக வெளியாகி வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் 100 கோடி படங்களைக் கொடுத்த அக்கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

























Bons Plans
Annuaire
Scan