லியோ படத்தில் வனிதா விஜயகுமாரின் மகனா.!!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 05:58 | பார்வைகள் : 5701
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது. முதல் நாளில் 148 கோடி வரை வசூல் செய்த இந்த படத்தின் வசூல் இரண்டாவது நாளில் குறைந்தது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளில் 10% அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் வனிதா லியோ படத்தில் தனது மகன் இடம் பெற்றிருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் காட்சி ஒன்றில் தளபதி விஜய் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டுவார் அந்த புகைப்படம் உண்மையில் வனிதா விஜயகுமார் மகனை தூக்கி வைத்திருக்கும் போது எடுத்த ஒன்று தான்.
படத்தில் தன்னுடைய மகனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.