தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்றது.!

21 ஐப்பசி 2023 சனி 13:42 | பார்வைகள் : 10096
கடந்த 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறி, வருகிற 25ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025