Paristamil Navigation Paristamil advert login

 உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு

 உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு

21 ஐப்பசி 2023 சனி 07:54 | பார்வைகள் : 10301


உலகத்திலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 8,133 மெட்ரிக் தொன் அளவுக்கான தங்கத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது.

தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ஜேர்மனியிடம் 3,355 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது.


எந்தவித மாற்றமும் இன்றி 2,452 மெட்ரிக் தொன் தங்க கையிருப்புடன் இத்தாலி 3வது இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டிடம் 1,040 மெட்ரிக் தொன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது.

8வது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 846 மெட்ரிக் தொன் தங்கம் உள்ளது.


9வது இடத்தில் இந்தியா 785 மெட்ரிக் தொன்னுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து நாட்டிடம் 612 மெட்ரிக் தொன் தங்கம் உள்ளது.

தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக் தொன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்