'லியோ'வில் 'எல்சியு' இருக்கா? - உதயநிதி தகவல்

18 ஐப்பசி 2023 புதன் 08:25 | பார்வைகள் : 6169
விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’லியோ’ படத்தை பார்த்ததாக தெரிகிறது.
இந்த படம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தளபதி விஜய் அண்ணா மற்றும் அபாரமான இயக்குனர் லோகேஷ் நாகராஜ் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளதோடு, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் ’லியோ’ படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ’லியோ’ திரைப்படம் LCU படமா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டில் இருந்து இது LCU படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் LCU திரைப்படத்துக்கு 7 மணி காட்சி அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025