கட்டணம் அதிகரிப்பு - வெப்பமூட்டி பயன்பட்டைக் குறைத்த மக்கள்!

18 ஐப்பசி 2023 புதன் 07:46 | பார்வைகள் : 9742
கடந்த குளிர்காலத்தின் போது பிரான்சில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெப்பமூட்டியினை மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தியுள்ளனர்.
79 % சதவீதமான மக்கள் வெப்பமூட்டியை மிக குறைந்த அளவில் பயன்படுத்தியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 53% வீதமாக இருந்தது. மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 26% வீதமாக உயர்வடைந்துள்ளது.
எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதை அடுத்து, தங்களுக்கான கட்டணங்களை குறைக்கும் விதமாக இந்த பயன்பாட்டினைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக ‘வாங்கும் திறன்’ (purchasing Power) மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, வெப்பமூட்டிக்காக செலவு செய்ய தாம் விரும்பவில்லை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025