ஹாசா மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் குண்டு வீச்சு! - பிரான்ஸ் கண்டனம்!

18 ஐப்பசி 2023 புதன் 05:06 | பார்வைகள் : 11747
ஹாசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவல் குண்டுத்தாக்குதல் நடாத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஹாசாவின் Al-Ahli Arab மருத்துவமனை மீது நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டது. இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதை எந்த காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாது. பொதுமக்களை குறிவைப்பதை எதுவும் நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களை நாம் நினைத்துக்கொள்கிறோம். அனைவரது பார்வையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே இருக்க வேண்டும்!” என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025