லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டட இடிபாடுகளுக்குள் இலங்கையர்?
18 ஐப்பசி 2023 புதன் 02:59 | பார்வைகள் : 11087
லெபனானின் தெற்கு பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட 5 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அங்கிருந்த இலங்கை பெண் ஒருவரும் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெற்கு லெபனானில் பணியாற்றும் இலங்கையர்கள் 703 86 754 அல்லது 71 960 810 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்துமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களது விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என லெபனானுக்கான இலங்கை தூதுவர் காமினி ஜயவீர தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan