'கமல் 233' படத்தின் டைட்டில் இதுவா?
17 ஐப்பசி 2023 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 8668
கமலஹாசன் கடந்த 2008 ஆம் ஆண்டு ’மர்மயோகி’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின என்பதும் இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ், ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா சரண், சுஷ்மிதா சென் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் ஏவிஎம் ஸ்டுடியோவில் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா போட்டோஷூட் கூட நடந்ததாக செய்தி வெளியானது. ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசன் ஏற்கனவே கைவிடப்பட்ட படத்தின் ‘மர்மயோகி’ என்ற டைட்டிலை ’கமல் 233’ படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ’வேட்டையாடு விளையாடு’ படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கமல்ஹாசன் படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan