ஹமாஸ் தாக்குதலில் 21 பிரெஞ்சு மக்கள் பலி! - 11 பேரினைக் காணவில்லை!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 12:56 | பார்வைகள் : 11310
இஸ்ரேல் - ஹமாஸ் அமைக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலில் 21 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நிலப்பரப்பு மீது ஹமாஸ் அமைப்பு இன்று ஒன்பதாவது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. தாக்குதலில் மொத்தமாக 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (முன்னதாக வெளியிடப்பட்ட தரவுகளின் படி 18 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது) மேலும், 11 பேர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை எனவும், இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளை, காணாமல் போயுள்ளவர்கள் பிணையக்கைதிகளாக ஹமாஸ் குழுவினரால் பிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan