விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி !

17 ஐப்பசி 2023 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 7202
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதனை அடுத்து அவர் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு தற்போது மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தல தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தல அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்தால் என்ன, தற்போது தல தோனியை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.