மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - château de Versailles இல் பரபரப்பு!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 12:33 | பார்வைகள் : 11655
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக château de Versailles கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.15 மணி அளவில் இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. அங்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இதே château de Versailles கட்டிடத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025