Arras தாக்குதலுக்கு முன் தாக்குதல்தாரி Mohammed M காணொளிப்பதிவு மற்றும் ஒலிவடிவப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

17 ஐப்பசி 2023 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 9532
கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் உள்ள Lycée Gambettaவில் கூரிய கத்தியால் பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஒரு பேராசிரியரை படுகொலை செய்ததும் மேலும் மூவரை படுகாயம் அடைய வைத்த்ததும் அறிந்த செய்தியே.
குறித்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரி Mohammed M குறித்த பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒரு காணொளிப் பதிவையும், ஒரு ஒலிவடிவ பதிவையும் வெளியிட்டுள்ளார் என்பது அவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளி, ஒலிவடிவ பதிவுகள் இணையத்தளத்தில் பதிவேற்ற செய்யப்படதா என்பது குறித்த தகவல்கள் தமது விசாரணையில் இதுவரை தெரிய வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளியில் தான் இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக அவர் பேசியுள்ளார். புலனாய்வுத் துறையினரின் விசாரணையின் கீழ் இருக்கும் தாக்குதல் தாரி தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் காணொளி, ஒலிவடிவப் பதிவுகள் இத்த தாக்குதலை அவர் ஏற்கனவே திட்டமிட்டு செய்துள்ளார் என்பதை உறுதி செய்வதாக, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025