பெல்ஜியத்தில் தாக்குதல் - பிரான்சில் ஒருவர் கைது!

20 ஐப்பசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 11460
பெல்ஜிய தலைநகர் Brussels இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரான்சில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஒக்டோபர் 19, வியாழக்கிழமை இக்கைது சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. RAiD அதிரடிப்படையினர் அங்குள்ள வீடொன்றை சுற்றி வளைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.
கடந்த திங்கட்கிழமை Brussels நகரில் பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதி பின்னர் கைது செய்யப்பட்டான். துனிசியா நாட்டைச் சேர்ந்த அவன் 2011 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பாவின் நான்கு நாடுகளில் குடியுரிமை தஞ்சம் கோரியுள்ளான். 45 வயதுடைய குறித்த பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரே நேற்று வியாழக்கிழமை Nantes நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025