வெடிகுண்டு அச்சுறுத்தல் - 48 மணிநேரத்தில் 18 பேர் கைது!

19 ஐப்பசி 2023 வியாழன் 17:28 | பார்வைகள் : 10987
நாடு முழுவதும் பெரும் பதட்டமான சூழ்நிலைய ஏற்படுத்தியுள்ள வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சற்று முன்னர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இதனைத் தெரிவித்தார். “கடந்த 48 மணிநேரத்தில் 18 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் சிறுவர்கள்.” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்கள், பாடசாலைகள், தொடருந்து நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. பலமுறை வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை மட்டும் 15 விமான நிலையங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டிருந்தன. château de Versailles கட்டிடத்துக்கு கடந்த ஆறு நாட்களில் நான்கு தடவை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025