வெடிகுண்டு அச்சுறுத்தல் - ஒரே வாரத்தில் நான்காவது முறையாக வெளியேற்றப்பட்ட château de Versailles!
19 ஐப்பசி 2023 வியாழன் 13:34 | பார்வைகள் : 10119
கடந்த ஒரு வாரத்தில் château de Versailles கட்டிடத்துக்கு நான்காவது தடவையாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை பிரான்சில் உள்ள 15 விமான நிலையங்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை Montpellier, Lille, Nantes-Atlantique, Bordeaux, Pau மற்றும் Beauvais-Tillé ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டிருந்தன. Toulouse நகரில் உள்ளா ஆறு உயர்கல்வி பாடசாலைகள் வெளியேற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில், château de Versailles கட்டிடத்துக்கும் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். கடந்த ஆறு நாட்களில் இடம்பெறும் நான்காவது வெளியேற்றம் இதுவாகும்.


























Bons Plans
Annuaire
Scan