ஹமாஸ் தாக்குதலில் 28 பிரெஞ்சு மக்கள் பலி!
19 ஐப்பசி 2023 வியாழன் 13:18 | பார்வைகள் : 17830
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இதுவரை 28 பிரெஞ்சு மக்கள் பலியானதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரெஞ்சு மக்கள் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது கவலையளிப்பதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களை பெறுவது பெரும் சிரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின் படி 24 பிரெஞ்சு மக்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, ஏழு பேர் தொடர்பில் தகவல்கள் ஏதும் இல்லை எனவும், அவர்கள் ஹமாஸ் படையினரால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan