Ardennesயில் உள்ள Vrigne-aux-Boisநகரில் காணாமல் போன 10 வயது Loana என்னும் சிறுமி சடலமாக மீட்பு.
19 ஐப்பசி 2023 வியாழன் 09:46 | பார்வைகள் : 11673
Ardennes பகுதியில் உள்ள Vrigne-aux-Bois நகரில் கடந்த செவ்வாய்கிழமை (17/10) 10 வயது Loana எனும் சிறுமி காணாமல் பேயுள்ளார் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
அவர் காணாமல் போனபோது சாம்பல் நிற ஜீன்சும், இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட், கருப்பு கோட் மற்றும் வெள்ளை நிற பாதணிகளும் அணிந்திருந்தார் எனவும் 1.20 மீட்டர் உயரமும் உள்ளவர் எனவும் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் Vrigne-aux-Bois நகரின் மத்தியில் உள்ள rue Saint-Michel பகுதியில் ஒரு பாதாள அறையில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அந்த நகரில் வசிக்கும் கடை ஒன்றின் உரிமையாளர் தெரிவிக்கையில் " குறித்த ச சிறுமியை நான் பல தடவை வீதிகளிலே பார்த்திருக்கிறேன் அவரின் பெற்றோர்கள் அவரை அதிகம் கவனிப்பதில்லை இரவுகளில் கூட வீதியில் நடமாடுவார் " என குறிப்பிடும் கடை உரிமையாளர்.
"கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும் நான் அறிவேன் கடந்த இரண்டு மாதங்களாக அவர் இங்கே வசித்து வருகிறார் அமைதியாக இருக்கும் குறித்த நபர் தனியாகவே வீடெடுத்து தங்கியிருந்தார் " எனவும் தெரிவித்துள்ளார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan