திருகோணமலை சைவ ஹோட்டல் உணவு பெற்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
19 ஐப்பசி 2023 வியாழன் 08:38 | பார்வைகள் : 13219
திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார்.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மதிய உணவுக்காக குறித்த சைவ ஹோட்டலில் உணவுபார்சல் கொள்வனவு செய்யப்பட்டது.
இதற்குள் பூரான் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கடை உரிமையாளர் மற்றும் சமையற்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கடையை மூடியதுடன், கைதான இருவரரும் எச்சரிக்கையின் பின் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan