Pantin : இளைஞனுக்கு கத்திக்குத்து!
18 ஐப்பசி 2023 புதன் 18:34 | பார்வைகள் : 14013
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு Pantin நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரவு 9.15 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினரோடு அவர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்தனர்.
rue Denis-Papin வீதியில் இளைஞன் ஒருவன் கத்திக்குத்து இலக்கான நிலையில், இரத்த வெள்ளத்தில் வீதியில் கிடந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பான விசாரணைகளை 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan