இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்-தமிழ் அரசியல்வாதிகள் விஜய்க்கு கடிதம் அனுப்பியது உண்மையா?

18 ஐப்பசி 2023 புதன் 14:52 | பார்வைகள் : 8533
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை இந்தியா உட்பட உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிகள் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் ’லியோ’ திரைப்படம் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் இலங்கையிலும் வெளியாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தங்களால், உயிர் அச்சுறுத்தலால் அவர் தனது பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதற்கு நீதி கோரி இலங்கையின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இம்மாதம் 20 ஆம் தேதி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நாளில் ’லியோ’ திரைப்படம் வெளிவருவது எங்கள் போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது. அத்துடன் அது ஈழத்தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாக கருதப்படுகிறது.
எனவே ஈழத் தமிழர்கள் உங்களுக்கு மிக நெருங்கிய தொடர்பில் இருப்பதால் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு ஈழத்தில் இருக்கிறார்கள் என்பதால் ’லியோ’ திரைப்பட காட்சிகளை இம்மாதம் 20ஆம் தேதி இலங்கையில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தமிழ் எம்பிகள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025