இலங்கை – இந்திய கப்பல் சேவையில் புதிய சிக்கல் - தங்கம் கடத்துவதாக தகவல்

18 ஐப்பசி 2023 புதன் 11:10 | பார்வைகள் : 7987
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது.
பயணத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில், குறித்த கப்பலில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியதுடன், திடீரென அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு சோதனை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் தங்கம் மீட்கப்படவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் கப்பலானது பயணத்தை ஆரம்பித்தது.