Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வீரியமடைந்து வரும் கண் நோய்!

இலங்கையில் வீரியமடைந்து வரும் கண் நோய்!

18 ஐப்பசி 2023 புதன் 09:49 | பார்வைகள் : 7629


இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே தற்போது பரவிவரும் கண் நோய் வீரியமடைந்து வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கண்நோய்க்குள்ளான மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கண்நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்கள் சிவத்தல், கண்களில் இருந்து தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவை கண் நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்