இலங்கை அணியில் இருந்து கேப்டன் நீக்கம்..
.jpeg)
15 ஐப்பசி 2023 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 6161
உலகக்கோப்பை போட்டியில் இருந்து தசுன் ஷனகா நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வருகின்றது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அணியில் இருந்து தசுன் ஷனகா நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, ஷனகாவுக்கு வலது தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இவர் குறைந்தது 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து தசுன் ஷனகா விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை அணிக்கு கேப்டனாக சமிகா கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025