Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் - தண்ணீரின்றி தவிக்கும்  மக்கள்

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் - தண்ணீரின்றி தவிக்கும்  மக்கள்

15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 8210


இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நேற்று காசா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் மொத்தம் 2,215 பேர் உயிரிழந்துள்ளனர்.

 8,714 படுகாயமடைந்து இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெளிநாட்டு குடியுரிமையை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லை கடந்து செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகங்களில் இருந்து மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றனர்.

இந்நிலையில் காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை  தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்து விட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் பாலஸ்தீனத்தின் காசா நகரில் மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் கடுமையான அவதி அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்