ஜேர்மனியில் கோர விபத்து - 7 பேர் பலி
                    15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 13399
ஜேர்மனியின் முனிச் நகரின் கிழக்கு பகுதியில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
அப் பகுதியில் வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனத்தை காவல்துறை சோதனை சாவடியில் நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் காவல்துறையினரின் இந்த அறிவுறுத்தலை மதிக்காது வேகமாக பயணித்த ஜீப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் அவ் ஜீப் ரக வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan