Arras தாக்குதலுக்கு தூண்டுதலாக அமைந்த ஹமாஸ் - பிரதமர் குற்றச்சாட்டு!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 04:37 | பார்வைகள் : 11983
Arras நகரில் உள்ள lycée Gambetta-Carnot பாடசாலையில் இடம்பெற்ற தாக்குதல் ஹமாஸ் தாக்குதலின் தூண்டுதலில் இடம்பெற்றதாக பிரதமர் Élisabeth Borne குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடம் ஒருவித கிளர்ச்சியை தூண்டியுள்ளது. அதன் காரணமாகவே Arras நகரில் உள்ள குறித்த உயர்கல்வி பாடசாலையில் தாக்குதல் இடம்பெற்றதாக பிரதமர் நேற்று தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பும் பிரான்சில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கும் தொடர்பு இல்லை என்றபோதும், அந்த தாக்குதல் ஒரு தூண்டுகோலாக இருந்ததாக பிரதமர் குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாட்டு நாடுகளின் அரசியலை பிரான்சுக்கு கொண்டுவருவதை நான் விரும்பவில்லை, அவர்களது அரசியல் சித்தார்த்தங்கள் வேறு வகையானது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேலில் 17 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளதையும், 15 பேரின் தகவல்கள் கிடைக்கவில்லை என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

























Bons Plans
Annuaire
Scan