முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார் !

17 ஐப்பசி 2023 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 5983
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
அந்த வகையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார். முதல் அமைச்சரின் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கான களப் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசின் திட்டங்களின் நிலைகளை பற்றி அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025