பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் - வெளியேற்றம் - இரு மாணவர்கள் கைது!!

16 ஐப்பசி 2023 திங்கள் 15:19 | பார்வைகள் : 16577
Colmar நகரில் உள்ள lycée Blaise-Pascal எனும் உயர்கல்வி பாடசாலையே இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் வெளியேற்றப்பட்டது. 600 வரையான மாணவர்கள் அங்கு கல்வி கற்கும் நிலையில், பாடசாலையின் நிர்வாகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்ட நிலையில், பாடசாலையில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு பாடசாலை வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.
அதேவேளை, சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு 15 வயதுடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புதிய கல்வி ஆண்டின் பின்னர் பிரான்சில் விடுக்கப்படும் 168 ஆவது பாடசாலை மீதான வெடிகுண்டு அச்சுறுத்தல் இதுவாகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025