விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் எந்த படத்திற்கு?
16 ஐப்பசி 2023 திங்கள் 14:51 | பார்வைகள் : 7162
தமிழ் தெலுங்கு திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஷாருக்கானுடன் இவர் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இவர் தற்போது ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ’விடுதலை 2’ ‘மகாராஜா’ ’காந்தி டாக்ஸ்’ ’பிசாசு 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம். அவரது இயக்கத்தில் உருவான ’பிசாசு 2’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் மிஷ்கின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதை பார்த்து மிஷ்கின் அவரை வேற லெவலில் மாற்றி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan