தலையை துண்டிப்பேன் என ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது!
16 ஐப்பசி 2023 திங்கள் 13:33 | பார்வைகள் : 17423
ஆசிரியர் ஒருவருக்கு தலையை வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தமிழர்கள் செறிந்து வாழும் Pantin (Seine-Saint-Denis) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் வாசலில் ஒக்டோபர் 13, வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில் காவல்துறையினர் தலையிட்டு குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
அல்ஜீரிய நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த நபர் அப்பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் அவர் இன்று திங்கட்கிழமை காலை பொபினி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் விரைவில் பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan