இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ்
16 ஐப்பசி 2023 திங்கள் 09:08 | பார்வைகள் : 6682
இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைவதாக குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 429 ஓட்டங்கள் இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 326 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக 344 ஓட்டங்கள் குவித்தும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் தான் கேப்டன் தசுன் ஷானகா காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகினார்.
இதன் காரணமாக அதிரடியில் மிரட்டி வரும் குசால் மெண்டிஸ், இலங்கையின் புதிய கேப்டனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கேப்டன் ஆனதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ள மெண்டிஸ், எதிர்வரும் ஆட்டங்களில் நான் விளையாடி வரும் வழியிலேயே பயணிப்பேன் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் நான் எதையும் மாற்றும் அவசியம் இல்லை. இந்த அளவிலான செயல்திறனையே நான் தக்கவைத்துக்கொள்ள போவதே என் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
குசால் மெண்டிஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 76 (42) ஓட்டங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 122 (77) ஓட்டங்களும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan