இஸ்ரேலில் இருந்து பிரெஞ்சுமக்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள்!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 21:00 | பார்வைகள் : 11771
இஸ்ரேலில் உள்ள பிரெஞ்சு மக்களை அழைத்து வர மேலும் மூன்று சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் இன்று எட்டாவது நாளாக யுத்தம் இடம்பெற்று வருகிறது. இரு தரப்புகளில் சேர்த்து கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பிரெஞ்சு மக்களும் உள்ளனர். மேலும் 13 பேர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், அங்கிருக்கும் 1,200 பிரெஞ்சு மக்களை அழைத்து பிரான்சுக்கு அழைத்து வர மூன்று சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இஸ்ரேலுக்கு பயணமாகியிருந்த பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine Colonna அங்கு வைத்து இதனை அறிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan