ஹமாஸ் தாக்குதலில் 19 பிரெஞ்சு மக்கள் பலி - இஸ்ரேலில் வெளியுறவுத்துறை அமைச்சர்!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 18:08 | பார்வைகள் : 10143
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இஸ்ரேலின் Tel Aviv நகரினை பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine Colonna சென்றடைந்தர்.
அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், மற்றும் இஸ்ரேலின் பிரதமரைச் சந்தித்தார். பின்னர் ஹாசா நிலப்பரப்பில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள Ashkelon மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் மக்களை பார்வையிட்டார். “மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை பிரான்ஸ் வழங்கும். நடமாடும் சிகிச்சை மையம் ஒன்றையும் பிரான்ஸ் ஏற்படுத்திக்கொடுக்கும்!” என அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, அங்கு கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை 17 இல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளதாகவும், 13 பேர் தேடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan