Val-de-Marne : பாரிய தீ விபத்து - ஒன்பது பேர் காயம்!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 12829
Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஐவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது. அங்குள்ள மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்றில் அதிகாலை திடீரென தீ பரவ ஆரம்பித்தது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சி இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐம்பது வரையான தீயணைப்பு படையினர் இணைந்து போராடி தீயை கட்டுப்படுத்தினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan