இலங்கை இந்தியா பயணிகள் கப்பல் இன்று இரத்து!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 8152
நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை (14) காலை 7.00 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan