Pierrelaye : மகிழுந்துக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

12 ஐப்பசி 2023 வியாழன் 16:23 | பார்வைகள் : 10779
மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. Pierrelaye (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒக்டோபர் 10, செவ்வாய்க்கிழமை குறித்த நகரின் rue de la Fontaine du Roy வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றில் இருந்த சடலம் ஒன்றே மீட்கப்பட்டது. அங்கு சுற்றுலாப்பயணி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் மாலை 3.45 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றதாகவும் அறிய முடிகிறது.
மகிழுந்து ஒன்று முற்றாக எரிந்து, அதற்குள் ஆண் ஒருவரது சடலம் இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
விசாரணைகளில் குறித்த நபர் 60 வயதுகளை உடையவர் எனவும், இச்சம்பவத்துக்கு முன்னதாக பிற்பகல் 1 மணி அளவில் அதே இடத்தில் வைத்து பெண் ஒருவரை சந்தித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025