அரசியல் தலைவர்களுடன் ஜனாதிபதி மக்ரோன் ரகசிய சந்திப்பு !

12 ஐப்பசி 2023 வியாழன் 15:08 | பார்வைகள் : 9196
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று இரவு தொலைக்காட்சி வழியாக உரையாற்ற உள்ளார். இரவு 8 மணிக்கு இடம்பெற உள்ள இந்த உரைக்கு முன்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை நண்பகலின் போது எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த சந்திப்பை மேற்கொண்டார். இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் ஹமாஸ் படையினரின் தாக்குதல் குறித்து அவர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் Renaissance, MoDem, Horizons, Rassemblent national, Les Républicains, Union des démocrates et indépendants, Parti radical, La France insoumise, Parti socialiste, Europe Ecologie - Les Verts மற்றும் Parti communiste போன்ற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஊடகத்தினர் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்ட கதவின் பின்னால் இந்த சந்திப்பு இடம்ம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இன்று இரவு ஜனாதிபதி மக்ரோனின் உரை அமைந்திருக்கும் என அவதானிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025