யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் தலைமையிலான கொள்ளை கும்பல்

12 ஐப்பசி 2023 வியாழன் 08:49 | பார்வைகள் : 9504
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை தாக்கி, கும்பல் ஒன்றினால் பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக இளைஞனை மறவன்புலவுக்கு வரவைத்து இளைஞனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அவரிடமிருந்த நாலரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அபகரித்து சென்றுள்ளனர். அதன்பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களும், குறித்த நகைகளை கொள்வனவு செய்து அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக்கிய கடை உரிமையாளர் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமயில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025