Decathlon ஊழியர் பலி - விசாரணைகள் ஆரம்பம்!

12 ஐப்பசி 2023 வியாழன் 08:33 | பார்வைகள் : 13235
பரிசில் உள்ள Decathlon விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் புதன்கிழமை காலை பலியாகியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
La Madeleine பகுதியில் உள்ள பிரபலமான Decathlon விற்பனைக்கூடத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர் ஒருவர் வாகனம் ஒன்றில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் போது பலியாகியுள்ளார்.
forklift இயந்திரத்தில் சிக்குண்டு அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, அவரின் மரணத்துக்கான தொழிற்சங்கமும் கண்டனம் வெளியிட்டுள்ளது.