Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீது தாக்குதல் விசேட உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்!

இஸ்ரேல் மீது தாக்குதல்  விசேட உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்!

11 ஐப்பசி 2023 புதன் 15:53 | பார்வைகள் : 13901


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுவருவதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிறப்பு உரையாற்ற உள்ளார்.

நாளை, ஒக்டோபர் 2, வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு இந்த உரை இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி மாளிகை (Elysée) அறிவித்துள்ளது. 

நாளை, பகல் பல்வேறு அரசியல் தலைவர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திக்க உள்ளார். அதில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹமாஸ் அமைப்பு குறித்து கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் தொலைக்காட்சியூடான நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்