யாழ் போதனா வைத்தியசாலையில் உளநலம் பாதிக்கப்பட்டவர் மீது கொடூர தாக்குதல்
14 ஐப்பசி 2023 சனி 09:02 | பார்வைகள் : 7582
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
உளநலம் பாதிக்கப்பட்டவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் போதனா வைத்திய சாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஊழியரின் செயலை வீடியோ எடுத்த மருத்துவ பீட மாணவி மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மருத்துவ பீட மாணவியின் கைத்தொலைபேசியையும் புடுங்கி எடுத்தனர்.
நோயாளிகள் மற்றும் பார்வையிட வருபவர்கள் மீது பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறுவதாக தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வரும் நிலையில்
இது தொடர்பாக முறைப்பாடு வழங்கப்படாவிட்டால் கூட, இந்த கானொளியை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan