காசாவில் மீட்க்கப்பட்ட பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள்
.jpeg)
14 ஐப்பசி 2023 சனி 08:13 | பார்வைகள் : 8020
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட தரை நடவடிக்கையின் போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவு உடல்களை மீட்ட இஸ்ரேலிய படையினர் அவற்றை இஸ்ரேலிற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்களும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
காசாமீதான பாரிய தரைதாக்குதலிற்கு முன்னதாக சிறிய தரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி ஆயுதங்களை அகற்றும் நோக்கத்துடனும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை படையினர் சேகரித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.